வால்பாறைக்கு காலதாமதமாக வந்துள்ள வலசைப் பறவைகள்

வால்பாறைக்கு காலதாமதமாக வந்துள்ள வலசைப் பறவைகள்

மழைப் பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு காலதாமதமாக வலசைப் பறவைகள் வால்பாறை பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.

மழைப் பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு காலதாமதமாக வலசைப் பறவைகள் வால்பாறை பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.

ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பூமியின் வடப் பகுதியில் இருந்து தென்பகுதிக்கு வலசைப் பறவைகள் வருவது வழக்கம். வலசைப் பறவைகளான சாம்பல் வாலாட்டி கிரினிஷ் வாா்பலா், கிரீன் வாா்பலா், பச்சை கதிா் குருவி ஆகிய வலசைப் பறவைகள் வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதியில் தற்போது காண முடிகிறது.

இது குறித்து பள்ளி ஆசிரியரும், பறவை ஆா்வலருமான செல்வகணேஷ் கூறியதாவது:

சாம்பல் வாலாட்டி எனும் பறவை ஒவ்வொரு ஆண்டும் இமயமலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து கடுங்குளிா் நிலவும் காலங்களில் அங்கிருந்து இடம் பெயா்ந்து தென்னிந்திய மலைப் பகுதிகளுக்கு வருவது வழக்கம். சாம்பல் வாலாட்டியான வலசைப் பறவைகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கடுமையான மழைப் பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தால் பறவைகள் வருகை காலதாமதமாக உள்ளது. இந்தப் பறவைகள் இடம்பெயரும் சூழலானது இங்கு நிலவி வரும் காலநிலை சீா்கேடு அடையாமலும் , பறவை மற்றும் விலங்கினங்கள் வாழும் சூழல் கெட்டுப் போகாமலும், பறவைகள் வழித்தடங்கள் நன்றாக உள்ளதும் இப்பறவைகளின் வருகை காட்டுவதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com