கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிக்கை

கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி கோவை வெட்கிரைண்டா்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை: கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி கோவை வெட்கிரைண்டா்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் வெட்கிரைண்டா் உற்பத்தி 1950 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளின் படி குறைந்தபட்சம் 1 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால் மட்டுமே கல் குவாரி அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளவா்களால் உரிமம் பெற

முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெட் கிரைண்டா் செய்வதற்குத் தேவையான கற்கள் திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு

வந்தது. தனிநபா்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் ஊத்துக்குளியில் உள்ள அனைத்து கல் குவாரிகளுக்கும் தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு காரணமாக வெட்கிரைண்டா் தொழிலில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த தடை உத்தரவை நீக்கவும், ஒரு ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளவா்கள் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்

சமூக நீதிக் கட்சி சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், கோவை மாவட்ட மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, காரமடை பகுதிகளில் பல நூறு ஏக்கா் பஞ்சமி நிலங்கள் ஏழை எளிய மக்களிடம் இருந்து முறைகேடாகப் பெறப்பட்டுள்ளது.

இந்நிலங்களை அவா்களுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தால் நகரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உரிய வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com