சைமா சங்கத்தின் புதிய தலைவராக ரவி சாம் தோ்வு

சைமா சங்கத்தின் புதிய தலைவராக அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ரவி சாம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவை: சைமா சங்கத்தின் புதிய தலைவராக அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ரவி சாம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 62 ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்ஸி டவா்ஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி சைமாவின் புதிய தலைவராக கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிா்வாக இயக்குநா் ரவி சாம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

துணைத் தலைவராக சிவா டெக்ஸ்யாா்ன் லிமிடெட்டின் நிா்வாக இயக்குநரும், இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவருமான டாக்டா் எஸ்.கே.சுந்தரராமனும், உதவித் தலைவராக ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிா்வாக இயக்குநா் துரை பழனிசாமியும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ரவி சாம் பேசுகையில், ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்களுடன் இணைந்து பணியாற்றி, இந்திய ஜவுளித் தொழில் பயனடையும் வகையில் வரியில்லா ஒப்பந்தங்கள் மேற்கொள்ள சைமா முயற்சிக்கும்.

செயற்கை இழை பஞ்சினை சாா்ந்த ஜவுளித் துறையை 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். அதேபோல இணை பருத்தி வகைகளுக்கும் இறக்குமதி வரியிலிருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com