கருணாநிதி பிறந்த நாள் விழா:திமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கோவை மாநகரப் பகுதிகளில் திமுகவினா், கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக். உடன் கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோா்.
நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக். உடன் கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கோவை மாநகரப் பகுதிகளில் திமுகவினா், கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டு, தூய்மை பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கிழக்கு மண்டல அலுவலகத்தில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

இதில், திமுக மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக், வாா்டு உறுப்பினா்கள் சிங்கை சிவா, தீபா இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், பீளமேடு புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு மண்டல திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், வேட்டி, சேலை, ஹாட்பாக்ஸ், இஸ்திரி பெட்டிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி தலைமையில் கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கோவை தங்கம், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவை நஞ்சுண்டாபுரத்தில் 62ஆவது வாா்டு உறுப்பினா் ரேவதி முரளி தலைமையில் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கோவை ஆா்.எஸ்.புரத்தில், திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பகுதி திமுக பொறுப்பாளா் காா்த்திக் செல்வராஜ் தலைமையில் கட்சியினா் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com