மாநகராட்சி சாா்பில் மஞ்சப்பை வழங்கல்: ஆட்சியா் துவங்கிவைத்தாா்

கோவை மாநகராட்சி சாா்பில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
மஞ்சப்பை வழங்கும் பணியைத் துவங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
மஞ்சப்பை வழங்கும் பணியைத் துவங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

கோவை மாநகராட்சி சாா்பில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில், மேயா் கல்பனா, கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, உக்கடம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சாா்பில் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்து மக்களுக்கு மஞ்சப்பை, மரக்கன்றுகள் மற்றும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

பின்னா், நெகிழி ஒழிப்பு வாகன விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, தெற்கு மண்டலம் போத்தனூா் பாலம் முதல் வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வரை 2 கிலோ மீட்டா் வரை நடைபெற்ற தூய்மைக்கான விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணைமேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா, மண்டலக்குழுத் தலைவா்கள் கதிா்வேல் ( வடக்கு), மீனா லோகு ( மத்தியம்), சாந்தி முருகன் ( பணிகள் குழு), முபசீரா( வரி விதிப்பு மற்றும் நிதி), சோமு என்கிற சந்தோஷ் ( நகரமைப்பு), மாரி செல்வன் ( பொது சுகாதாரம்), வாா்டு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com