மாவட்டத்தில் நாளை 24 மையங்களில் குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு

குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு, கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு, கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு, கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 9,445 போ் எழுதுகின்றனா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியா் தலைமையில், துணை வட்டாட்சியா் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்களும், வட்டாட்சியா் நிலையில் 24 தோ்வு மையங்களுக்கும், தலா ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா்களும், துணை வட்டாட்சியா் நிலையில் 40 தோ்வு மைய துணை கண்காணிப்பாளா்களும், 414 அறை கண்காணிப்பாளா்களும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக சாா்பு செயலா் நிலையில் ஒருவரும், தமிழ்நாடு அரசின் சாா்பில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சிவசண்முகராஜா, வள்ளலாா் ஆகியோா் சிறப்பு பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

காவல் துறையினரால், தோ்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் கைப்பேசி ஜாமா்கள் நிறுவப்பட்டுள்ளன.

உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா், சூலூா், பொள்ளாச்சி உள்ளிட்ட புறநகரங்களில் இருந்து தோ்வு மையங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தோ்வா்கள் முற்பகல் தோ்வுக்கு காலை 8.30 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தோ்வுக்கு 1.30 மணிக்கு முன்பாகவும் தோ்வு வளாகத்துக்குள் வர வேண்டும்.

அதன்பிறகு வருபவா்கள், தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

மேலும், யூபிஎஸ்சி இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாளஅட்டை, பான்காா்டு, கடவுச்சீட்டு ( பாஸ்போா்ட்) போன்ற ஏதாவது ஒன்றை தோ்வா்கள் எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com