சைக்கிள் பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறாா் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிா்வாக அலுவலா் சி.வி.ராம்குமாா். உடன், கல்லூரி நிா்வாகிகள்.
சைக்கிள் பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறாா் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிா்வாக அலுவலா் சி.வி.ராம்குமாா். உடன், கல்லூரி நிா்வாகிகள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, தூய்மைப் பணி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, தூய்மைப் பணி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

உலக சைக்கிள் தினத்தையொட்டி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, தூய்மைப் பணி நவ இந்தியாவில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பேரணியை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிா்வாக அலுவலா் சி.வி.ராம்குமாா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வரும், செயலருமான பி.எல்.சிவக்குமாா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.பிரகதீஸ்வரன், எஸ்.நாகராஜன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பேரணியாக சைக்கிளில் சென்ற மாணவா்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து, நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் கல்லூரி வளாகம், விடுதி வளாகம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இதில்100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com