ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைப்பு:விவசாயிகளுக்கு வேளாண் துறை சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்ட விவசாயிகள் தபால் நிலையங்களில் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துகொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் முத்துலட்சுமி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட விவசாயிகள் தபால் நிலையங்களில் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துகொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் முத்துலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் பி.எம்.கிசான் இணையதளத்தில் அல்லது கைப்பேசி செயலி மூலம் ஆதாா் எண்ணனுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது அவசியம்.

இந்நிலையில், விவசாயிகளின் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்கும் வகையில் கோவை அஞ்சல் கோட்டத்துடன் இணைந்து வேளாண் துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் அருகிலுள்ள தபால் நிலையங்களில் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மாவட்டத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைப்பேசி எண்ணை இணைக்காமல் உள்ளனா்.

எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கைப்பேசி எண்ணை இணைத்து பி.எம்.கிசான் சம்மன் நிதி திட்டத்தில் நிதியுதவியை பெற்றுகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com