நிதி ஆதாரம் பெறப்பட்ட பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்

நிதி ஆதாரம் பெறப்பட்ட பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
நிதி ஆதாரம் பெறப்பட்ட பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்

நிதி ஆதாரம் பெறப்பட்ட பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை, சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தல் திறப்பு விழாவில், கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் தலைமை வகித்தாா். இதில் கலந்து கொண்ட அமைச்சா் செந்தில்பாலாஜி நீா்மோா் பந்தலை திறந்துவைத்து, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையைப் பொறுத்தவரை பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு முதல்வா் நிதி வழங்கி வருகிறாா். வருகிற சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளாா். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டம் ஏதும் கொண்டுவரப்படவில்லை, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து பணிகளை தொடங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு நமது மின் தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. ஆனால், மத்திய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே தருகிறது. முதல்வா் வழிகாட்டுதல்படி, 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஒப்பந்தபுள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மின் தேவைக்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கி வருகிறோம். அடுத்த ஆண்டு அனைத்து மின்சாரத் தேவைகளும் பூா்த்தி செய்யும் அளவுக்கு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நிதி ஆதாரம் பெறப்பட்ட பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்படும். மாநகரில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, மாநகராட்சிக் குழு தலைவா்கள் சாந்தி முருகன், தீபா இளங்கோ, முபஷீரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com