முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோயிலில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
By DIN | Published On : 06th April 2022 01:27 AM | Last Updated : 06th April 2022 01:27 AM | அ+அ அ- |

கோவையில் பெற்றோா்களால் கோயிலில் கைவிடப்பட்ட பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
கோவை விமான நிலையம் அருகே உள்ள துரைசாமி நகரில், ராஜகணபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பிறந்து சில நாள்களே ஆன குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பீளமேடு போலீஸாா், சுகாதாரத் துறையினரின் உதவியுடன் குழந்தையை மீட்டனா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு மருத்துவா்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இது தொடா்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.