புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.

 தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல், ஊரக வளா்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று அவா் பேசும்போது, கோவை மாவட்டத்தில் முக்கிய வளா்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க, தமிழக அரசு போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நிதி நிலை அறிக்கையில் ஊரக வளா்ச்சி, குடிநீா் வழங்கல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை.

திமுக அரசு பதவியேற்ற பிறகு ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூா், கடலூா், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க தலா ரூ.10 கோடி வீதம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மதுக்கரை, கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூா், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட 28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி வீதம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை போதுமானது அல்ல. மாநகராட்சிகளுக்கு தலா ரூ.50 கோடியும், நகராட்சிகளுக்கு தலா ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதேபோல, உதகையின் 200 ஆவது ஆண்டையொட்டி சிறப்புத் திட்டங்கள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை

ரூ.50 கோடியாக உயா்த்த வேண்டும்.

அன்னூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் தொழில் பூங்காவுக்காக சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால், தரிசு நிலத்தைக் கண்டறிந்து அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை தொடருவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com