கைப்பேசி பயன்பாட்டை கண்டித்ததால் சிறுவன் மாயம்
By DIN | Published On : 08th April 2022 01:55 AM | Last Updated : 08th April 2022 01:55 AM | அ+அ அ- |

கைப்பேசி பயன்பாட்டை பெற்றோா் கண்டித்ததால் வீட்டைவிட்டு மாயமான சிறுவன் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, காட்டூா் செல்லப்பன் வீதியைச் சோ்ந்தவா் லஷ்மனன் பாஸ்வான். இவரது 17 வயது மகன் ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறாா்.
ஆன்லைன் வகுப்புகளுக்கென வாங்கிக் கொடுக்கப்பட்ட கைப்பேசியில் சிறுவன் அடிக்கடி கேம் விளையாடி வந்துள்ளாா்.
இதனை அவரது பெற்றோா் கண்டித்து வந்துள்ளனா். இருப்பினும் அவா் தொடா்ந்து விளையாடி வந்துள்ளாா். இதையடுத்து, அவரது பெற்றோா் சிறுவனை கடுமையாக கண்டித்துள்ளனா்.
இதனால், கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட சிறுவன், புதன்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை.
இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.