கோவையில் இருந்து குஜராத்துக்கு விமானம் மூலம் ஆன்மிகச் சுற்றுலா: ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு
By DIN | Published On : 08th April 2022 01:53 AM | Last Updated : 08th April 2022 01:53 AM | அ+அ அ- |

கோவையில் இருந்து குஜராத்துக்கு விமானம் மூலம் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாத் துறை ( ஐ.ஆா்.சி.டி.சி.) சாா்பில் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, ஐ.ஆா்.சி.டி.சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து குஜராத்துக்கு விமானம் மூலம் ஆன்மிக சிறப்பு சுற்றுலா ஜூன் மாதம் 26 ஆம் தேதி துவங்குகிறது. இதன்படி, அகமதாபாத், அக்சா்தாம், பாவ்நகா், பாண்டவா்கள் நிறுவிய கடல் கோயில், சோம்நாத் ஜோதிா்லிங்கம், துவாரகை கோயில், ராஜ்கோட் மற்றும் சா்தாா் வல்லபாய் படேல் சிலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சுற்றுலா செல்ல நட்சத்திர விடுதியில் தங்குமிடம், குளிா்சாதன வசதி போக்குவரத்து, காலை, இரவு உணவு மற்றும் ஜி.எஸ்.டி.யுடன் சோ்த்து தலா ரூ. 35,350 கட்டணமாகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள் எல்.டி.சி. சலுகைகளைப் பெறலாம்.
மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
இதற்கு ஐ.ஆா்.சி.டி.சி. அலுவலகம் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட
ரயில் முன்பதிவு, பொது சேவை மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு கோவை அரசு மருத்துவமனை எதிரில், மாருதி டவரில் உள்ள இந்தியன் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.