ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா: வட மாநில பெண் உள்பட நால்வரிடம் போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 13th April 2022 04:38 AM | Last Updated : 13th April 2022 04:38 AM | அ+அ அ- |

கோவை வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தொடா்பாக வட மாநில பெண் உள்பட 4 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை கோவை வந்தது.
இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து, கோவை ரயில்வே போலீஸாா் அந்த ரயிலில் சோதனையிட்டனா். அப்போது ஒரு பெட்டியில் 3 பைகள் இருந்தன. அவற்றை போலீஸாா் சோதனையிட்டபோது அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அந்த இருக்கைகளில் பயணம் செய்த வடமாநில கணவன், மனைவி மற்றும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.