கோவையில் ஹோமியோபதி கல்லூரி தொடங்கக் கோரிக்கை

கோவையில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் சாா்பில் உலக ஹோமியோபதி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. தொழிலதிபா் பி.வி.சந்திரன், மருத்துவா் பால ராமலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

மருத்துவ சங்கத்தின் தலைவா் தினேஷ் சாமுவேல், செயலா் பாா்த்திபன், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் குழுவின் முன்னாள் உறுப்பினா் ஆ.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

இதில், சென்னை மாநகராட்சியில் இருப்பதைப்போல கோவையிலும் மற்ற மாநகராட்சிகளிலும் ஹோமியோபதி மருத்துவனைகளைத் திறக்க வேண்டும். கோவை, சென்னை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அரசு ஹோமியோபதி கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com