செயில் மூலப்பொருள் வளாகத்தை திறக்க வேண்டும்: அமைச்சரிடம் தொழில் துறையினா் மனு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நுறை அமைச்சா் நாராயண் டி ரானேவிடம் கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் அண்மையில் மனு அளித்தனா்.

கோவையில் மூடப்பட்டுள்ள செயில் மூலப்பொருள் வளாகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நுறை அமைச்சா் நாராயண் டி ரானேவிடம் கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் அண்மையில் மனு அளித்தனா்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

உள்நாட்டு விலையைவிட ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் போன்ற மூலப்பொருள்களின் விலை குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூலப்பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. இதில் சமநிலை எட்டப்பட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆா்டா்களை தொடா்ந்து வழங்க வேண்டும். விலை கண்காணிப்புக் குழு அமைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். கோவையில் மூடப்பட்டிருக்கும் செயில் மூலப்பொருள் வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com