முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அரசுப் பள்ளி மாணவா்கள் மோதல்
By DIN | Published On : 29th April 2022 04:12 AM | Last Updated : 29th April 2022 04:12 AM | அ+அ அ- |

கோவையில் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்ட அரசுப் பள்ளி மாணவா்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு நாள்களுக்கு முன்பு மோதிக் கொண்டனா். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பொதுமக்கள்
அதிா்ச்சியடைந்து சப்தமிட்டுள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மாணவா்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனா். இந்த சம்பவத்தை அவ்வழியே காரில் சென்ற நபா் ஒருவா் விடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவா்களை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.