முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க கோரிக்கை
By DIN | Published On : 29th April 2022 04:16 AM | Last Updated : 29th April 2022 04:16 AM | அ+அ அ- |

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜெயராஜ் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வரை கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் செல்வது, குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணமாக உள்ளது. தென் மாவட்ட மக்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பாா்வையிட வருவதற்கும், கோவை, நீலகிரி மாவட்ட மக்கள், குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, ரயில்வே நிா்வாகம், இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க முன்வர வேண்டும். அதேபோல, திருச்செந்தூா்- பாலக்காடு விரைவு ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றாா்.