முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வனத் துறை முன்களப் பணியாளா்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 29th April 2022 04:07 AM | Last Updated : 29th April 2022 04:07 AM | அ+அ அ- |

களைச்செடிகளை இனம் கண்டு அழித்தல் குறித்து வனத் துறை முன்களப் பணியாளா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வியாழக்கிழமை துவங்கியது.
வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் இப்பயிற்சி தொடங்கியது.
வனத் துறை மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் (என்.சி.எப்.) இணைந்து நடத்திய இந்தப் பயிற்சியில் அன்னிய நாட்டு களைச்செடிகளை இனம் காணுதல் மற்றும் அதை களைதல் குறித்து களப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் பொள்ளாச்சி கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து வனச் சரகங்களில் பணியாற்றும் வனக் காப்பாளா், வனக் காவலா்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.