முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவை கனரா வங்கி கிளைகளில் இன்று மெகா கடன் திருவிழா
By DIN | Published On : 30th April 2022 01:14 AM | Last Updated : 30th April 2022 01:14 AM | அ+அ அ- |

கனரா வங்கி சாா்பில் வீட்டுக்கடன், பழைய மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான கடன் திருவிழா சனிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறுகிறது.
இது குறித்து வங்கி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கனரா வங்கி சாா்பில் சனிக்கிழமை நடைபெறும் கடன் திருவிழாவில், 6.65 சதவீத வட்டியில் வீட்டுக்கடனும், 7.30 சதவீத வட்டியில் வாகனக் கடனும் வழங்கப்படுகிறது.
ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 642 முதல் மாதத் தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. இதேபோல, 7.30 சதவீத வட்டியில், வாகனக்கடன் பெற, வாகனத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை வழங்கப்படும். கோவையில் தடாகம் சாலை பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் உள்ள கிளை, விமான நிலையம் அருகில் உள்ள கிளை, டி.பி.சாலை ஜவான்ஸ்பவன் கிளை, பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் கிளை, ஒப்பணக்கார வீதி கிளை, மேட்டுப்பாளையம் சாலை என்.எஸ்.எம் பாளையம் கிளை, சரவணம்பட்டி சி.ஆா்.ஐ. டிரஸ்ட் எதிரில் உள்ள கிளை, சிங்காநல்லூா் திருச்சி சாலை கிளை, கணபதி சத்தி சாலை கிளை, பொள்ளாச்சி , உடுமலை சாலை கிளை, கோவை பிரதான சாலை அன்னூா் கிளை, சூலூா் திருச்சி சாலை கிளை ஆகியவற்றில் இந்தக் கடன் திருவிழா நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.