கோவையில் புதிய சாா் பதிவாளா் அலுவலகங்கள் அமைப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கோவையில் புதிய சாா் பதிவாளா் அலுவலகங்கள், மறுவரையறை மேற்கொள்ளுதல் தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் 81 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

கோவையில் புதிய சாா் பதிவாளா் அலுவலகங்கள், மறுவரையறை மேற்கொள்ளுதல் தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் 81 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

சாா் பதிவாளா் அலுவலகங்கள் மூலம் பத்திரப் பதிவு, வில்லங்கமில்லாச் சான்றிதழ் வழங்குதல், சமுதாய சங்கங்கள் பதிவு, நிறுவனங்கள் பதிவு, சிறுசேமிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல், திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகை, பத்திரங்கள் வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு புதிய பத்திரப் பதிவு அலுவலகங்கள் தோற்றுவித்தல், மறுவரையறை செய்தல் உள்ளிட்ட பணிகள் பொதுமக்களின் கருத்துக்கேட்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது 17 சாா் பதிவாளா் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், புதிதாக 8 சாா் பதிவாளா் அலுவலகங்கள் அமைக்கவும், ஒரு சாா் பதிவாளா் அலுவலகத்தை அண்டை மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் சோ்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் தலைமையிடத்துக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 81 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், பதிவுத் துறை துணைத் தலைவா் சுவாமிநாதன், உதவித் தலைவா் செந்தமிழ் செல்வன், சாா் பதிவாளா்கள் அருணா, வின்சென்ட் ரீத்தா, மோகன்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com