மாநகரில் 79 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட நெகிழி டம்ளா்கள், பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் .

நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்கள் அதிக அளவில் வருவதால் மாநகரில் மீண்டும் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, ரேஸ்கோா்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், மத்திய மண்டல உதவி ஆணையா் சங்கா் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அதில், 30க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 50 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி டம்ளா்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, வடக்கு மண்டலத்துக்கு உள்ள பூ மாா்க்கெட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 29 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகரில் வெள்ளிக்கிழமை மட்டும் 79 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 10,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com