மாநகரில் தெருநாய்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை: மேயா் கல்பனா

கோவை மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயா் கல்பனா தெரிவித்துள்ளாா்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயா் கல்பனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாா்டு உறுப்பினா்கள் கூட்டம்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயா் கல்பனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாா்டு உறுப்பினா்கள் கூட்டம்.

கோவை மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயா் கல்பனா தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகராட்சி தெற்கு மற்றும் மேற்கு மண்டல வாா்டு உறுப்பினா்கள் கூட்டம், மேயா் கல்பனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைமேயா் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, மேற்கு மண்டலத் தலைவா் தெய்வயானை தமிழ்மறை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், மேயா் கல்பனா பேசியதாவது:

மாநகராட்சியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பன்றி வளா்க்கும் உரிமையாளா்களுக்கு, நோட்டீஸ் விநியோகம் செய்து பன்றிகளைப் பிடிக்க வேண்டும். உயிரியல் பூங்கா இயக்குநா் மூலமாக மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுந்தராபுரம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள், கோழிக் கழிவுகள் குறித்து சுகாதாரத் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது ஒதுக்கீட்டு இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் அரசுக் கட்டடம் கட்ட பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேர குடிநீா் விநியோகத் திட்டத்தின் கீழ் குடிநீா்க் குழாய் பதிக்க தோண்டப்படும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடையின்றி பணிகள் மேற்கொள்ள சூயஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். இந்தக் கூட்டத்தில் மண்டல உதவி ஆணையா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com