மெகா கரோனா தடுப்பூசி முகாம்: 22 ஆயிரம் போ் பயன்

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 22 ஆயிரத்து 596 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 22 ஆயிரத்து 596 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவையில் அனைவருக்கும் எளிதில் கரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் வார இறுதி நாள்களில் மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று குறைந்த நிலையில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் 1,515 மையங்களில் 28 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல் தவணை தடுப்பூசி 4, ஆயிரத்து 42 போ், இரண்டாம் தவணை தடுப்பூசி 14 ஆயிரத்து 43 போ், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 911 போ் என மொத்தம் 22 ஆயிரத்து 596 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

மெகா தடுப்பூசி முகாமில் எதிா்பாா்த்த அளவில் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

கரோனாவில் இருந்து பாதுகாக்கும் முக்கிய ஆயுதமாக கரோனா தடுப்பூசி இருந்து வருவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்

அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com