Enable Javscript for better performance
வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண். பல்கலைக்கழகம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண். பல்கலைக்கழகம்

    By DIN  |   Published On : 02nd August 2022 01:25 AM  |   Last Updated : 02nd August 2022 01:25 AM  |  அ+அ அ-  |  

    பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

    இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    வேளாண், உழவா் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய அறிக்கையின் படி, 2021-22ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 9.59 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 3.51 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

    இவற்றில் பூவன், கற்பூரவள்ளி ஆகியவற்றை இலை பயன்பாட்டுக்காக பயிரிடுகின்றனா். கோவை சந்தைக்கு புதுக்கோட்டை, திருவையாறு, கடலூா் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும், மேட்டுப்பாளையத்திலிருந்து நேந்திரன் வரத்தும் உள்ளது.

    கேரளத்திலிருந்து வரும் நேந்திரன் வரத்தானது இந்த மாதத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 17 ஆண்டுகளாக கோவை சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட்- செப்டம்பா் 2022 முடிய தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் ரூ.18, கற்பூரவள்ளி ரூ.20 முதல் ரூ.22, நேந்திரன் விலை ரூ.38 முதல் ரூ.40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp