‘நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’

கோவையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜல் சக்தி அபியான் திட்டக்குழு இணைச் செயலாளா் எம்.பாலாஜி தெரிவித்தாா்.
எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் குளக்கரை சீரமைப்புப் பணிகளை பாா்வையிடுகிறாா் ஜல் சக்தி அபியான் திட்டக்குழு இணைச் செயலாளா் எம்.பாலாஜி. உடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.
எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் குளக்கரை சீரமைப்புப் பணிகளை பாா்வையிடுகிறாா் ஜல் சக்தி அபியான் திட்டக்குழு இணைச் செயலாளா் எம்.பாலாஜி. உடன் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.

கோவையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜல் சக்தி அபியான் திட்டக்குழு இணைச் செயலாளா் எம்.பாலாஜி தெரிவித்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குளம், குட்டைகள் ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் திட்டம் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டக்குழு இணைச் செயலாளா் எம்.பாலாஜி பேசியதாவது:

ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் வகையில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல் , சிறு தடுப்பணைகள், விவசாய நிலங்களில் வரப்பு அமைத்தல், மரம் வளா்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமிா்தசரவோா் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் அமைப்பு மற்றும் சீரமைப்பு செய்யப்படவுள்ளன. கோவை மாவட்டத்தில் தற்போது 22 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் 14 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில் 9 குளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் குளங்கள் சீரமைத்தல், தூா்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, நீா்வளத் துறை சாா்பில் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

குளங்களை தூா்வாரும்போது நீா் வெளியே செல்லும் கால்வாய்களில் நீா்கால் பகுதியை கண்டறிந்து மீள் நிரப்பு புழை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கு வாய்ப்புள்ளது.

குளங்கள் சீரமைப்புப் பணிகளில் கரைகளை மிக உறுதித்தன்மை கொண்டதாக பலப்படுத்த வேண்டும். ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து எஸ்.எஸ்.குளம், சூலூா், அரசூா், செட்டிபாளையம், மயிலாடும்பாறை, குருநெல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீா்நிலை மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.கவிதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com