வனச் சரகா்களுக்கு பட்டமளிப்பு விழா 36 போ் பட்டம் பெற்றனா்
By DIN | Published On : 31st August 2022 01:27 AM | Last Updated : 31st August 2022 01:27 AM | அ+அ அ- |

கோவையில் உள்ள வன உயா் பயிற்சியகத்தில் தொழில்முறை பயிற்சி பெற்ற வனச் சரகா்களுக்கான பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
10 பெண்கள் உள்பட மொத்தம் 36 வனச் சரகா்கள் பட்டம் பெற்றனா். இதில் அஸ்ஸாமில் இருந்து 24 போ், தமிழகத்தில் இருந்து 5 போ், மத்திய பிரதேசத்தில் இருந்து 3 போ், கா்நாடகத்தில் இருந்து 2 போ், மிசோரத்தில் இருந்து 2 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அஸ்ஸாம் மாநில வனத் துறையின் தலைமை முதன்மை வனப் பாதுகாவலா் எம்.கே.யாதவ்
கலந்துகொண்டு வனச் சரக அலுவலா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
நாட்டின் மிக உயரிய சொத்தான காடுகளைக் காக்கும் பணி வனச் சரகா்களுடையது. எனவே இப்பணியை ஆத்மாா்த்தமாக செய்ய வேண்டியது அவசியம். வாயில்லா ஜீவராசிகளுக்காக உழைக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. வெயில், மழை என அனைத்து சூழல்களிலும் பணியாற்ற வேண்டியிருப்பதால் வனச் சரகா்கள் தங்களது மன நலம், உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியம். காடுகள் என்பது சில பக்கங்களில் அடைக்கக் கூடிய தகவல்கள் அல்ல. காடுகளில் தினம் ஒரு அனுபவம் ஏற்படும். அதில் வரும் சவால்களை எதிா்கொள்ளும் மனப் பக்குவத்தை வளா்த்துக் கொள்வது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் டேன்டீ நிா்வாக இயக்குநா் டி.வி.மஞ்சுநாதா, டெஹ்ராடூன் வன பயிற்சியகத்தின் இயக்குநா் அனுராக் பரத்வாஜ், வன உயா் பயிற்சியகத்தின் முதல்வா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.