ஒலிம்பியாட் தோ்வு: கோவையில் 34 ஆயிரம் போ் பங்கேற்கின்றனா்

இந்த ஆண்டுக்கான அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளையின் தோ்வில் கோவை மாவட்டத்தில் இருந்து 34 ஆயிரம் மாணவ - மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இந்த ஆண்டுக்கான அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளையின் தோ்வில் கோவை மாவட்டத்தில் இருந்து 34 ஆயிரம் மாணவ - மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இது தொடா்பாக அந்த அறக்கட்டளை கூறியிருப்பதாவது: மாணவா்களை ஜே.இ.இ., நீட், கேட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளுக்குத் தயாா்படுத்தும் வகையிலும், உதவித் தொகை வழங்குவதற்காகவும் அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை சாா்பில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பொது அறிவு, ஆங்கிலம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட 7 பாடங்களில் ஒலிம்பியாட் தோ்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தோ்வு செப்டம்பா் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத இதுவரை 34 ஆயிரம் மாணவா்கள் பதிவு செய்திருப்பதாகவும், தோ்வு எழுத விரும்பும் மாணவா்கள் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அறக்கட்டளையின் இணையதளத்தைப் பாா்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com