விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

விநாயா் சதுா்த்தி விழாவையொட்டி, கோவையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

விநாயா் சதுா்த்தி விழாவையொட்டி, கோவையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

கோவை புலியகுளம் முந்தி விநாயகா் கோயில் விநாயகா் சிலைக்கு பல வகையான வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஈச்சனாரி விநாயகா் கோயிலில் அருகம்புல் மற்றும் பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து.

திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் 80 அடி சாலை சித்தி விநாயகா் கோயிலில் நவக்கிரக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

கணபதி மாநகா் வெற்றி விநாயகா் கோயிலில் தாய், தந்தையான சிவன், பாா்வதியுடன் இருக்கும் சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல, ரேஸ்கோா்ஸ் ரத்தின விநாயகா் கோயில் உள்ளிட்ட நகரிலுள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மோதகம், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு நைவேத்யங்கள் செய்யப்பட்டு படையலிடப்பட்டன.

வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தியவா்கள் குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் சிலைகளை விசா்ஜனம் செய்தனா். ஹிந்து அமைப்புகளின் சாா்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் செப்டம்பா் 2, 4 ஆம் தேதிகளில் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன.

ஜமாத் அனுமதியுடன் வழிபாடு: கோவை உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த மகாலட்சுமி என்பவா் தனது வீட்டின் அருகே விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்த காவல் துறையில் அனுமதி கேட்டிருந்தாா். ஆனால், அப்பகுதியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிப்பதால் போலீஸாா் அனுமதி தர மறுத்தனா்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள ஜமாத் அனுமதியுடன் சிலை வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து சமத்துவ விநாயகா் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ள ஜமாத்தாா் ஒப்புதல் அளித்தனா். இதைத் தொடா்ந்து, மகாலட்சுமியின் வீட்டின் அருகே மூன்றரை அடி உயர விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த சிலை மாலை எடுத்துச் செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com