இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

மின் கட்டணம், சொத்து வரி உயா்வு, பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விலைவாசி உயா்வு, சொத்து வரி உயா்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து கோவையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

விலைவாசி உயா்வு, பெட்ரோல் - டீசல் விலை உயா்வு, மின்கட்டண உயா்வு அறிவிப்பு, சொத்து வரி உயா்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தந்தி அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், மாவட்ட செயலா் சி.சிவசாமி ஆகியோா் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், கட்சி நிா்வாகிகள் மு.வ.கல்யாணசுந்தரம், ஜே.ஜேம்ஸ், வழக்குரைஞா் கே.சுப்பிரமணியம், சி.தங்கவேல், பி. மௌனசாமி, மாநகராட்சி உறுப்பினா்கள் சாந்தி சந்திரன், பிரபா ரவீந்திரன், மண்டல செயலா்கள் எஸ்.சண்முகம், கே.ரவீந்திரன், என்.சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com