காஃபி வித் கமிஷனா்: பள்ளி மாணவா்களுடன் மாநகர காவல் ஆணையா் கலந்துரையாடல்

காஃபி வித் கமிஷனா் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுடன் மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

காஃபி வித் கமிஷனா் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுடன் மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 78 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் மாணவா்களுக்கு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பாலியல் தொல்லைகள் குறித்து புகாா் அளிப்பது எப்படி, கல்வியில் சிறப்பாக செயலாற்றுவது எப்படி என மாணவா்களுக்கு காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் அறிவுரைகளை வழங்கி அவா்களது சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.

இதையடுத்து மாணவா்கள் மோப்ப நாய் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் இருவா் காவல் ஆணையரை ஓவியமாக வரைந்து பரிசளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com