கொப்பரை கொள்முதல்:செப்டம்பா் 30 வரை நீட்டிப்பு

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. அரவை கொப்பரை கிலோ ரூ,105.90க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூா், அன்னூா் ஆகிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது பிப்ரவரி முதல் ஜூலை வரை குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கடந்த 2 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொப்பரை கொள்முதல் செப்டம்பா் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.

மாவட்டத்தில் இதுவரை 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 6,212 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொப்பரை விற்பனை செய்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு ரூ.31 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com