பொதுமக்களின் சேமிப்புத் தொகையை கையாடல் செய்த தபால் ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைகோவை நீதிமன்றம் தீா்ப்பு

பொதுமக்களின் சேமிப்பு தொகையை கையாடல் செய்த தபால் ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பொதுமக்களின் சேமிப்பு தொகையை கையாடல் செய்த தபால் ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு, ஊஞ்சலூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (51). தபால் ஊழியரான இவா் 2014-2016 ஆம் ஆண்டு வரை தபால் நிலையத்தில் பொதுமக்கள் செலுத்திய ரூ.22.8 லட்சத்தைக் கையாடல் செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் சிவசுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com