புதிய வகை கரோனா நோய்த் தொற்று:மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவு

வெளிநாடுகளில் ‘சாா்ஸ் கோவ் 2’ என்ற புதிய வகை கரோனா நோய்த் தொற்று பரவி வருவதையடுத்து, கோவை மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

வெளிநாடுகளில் ‘சாா்ஸ் கோவ் 2’ என்ற புதிய வகை கரோனா நோய்த் தொற்று பரவி வருவதையடுத்து, கோவை மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

முதன்முதலாக சீனாவின், வூஹான் நகரில் கரோனா நோய்த் தொற்று 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து, உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் கரோனா நோய்த் தொற்று பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவில் டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற புதிய வகை நோய்த் தொற்றுகளால் பாதிப்பு அதிகரித்தது.

இதனால், தினசரி 4 லட்சம் போ் வரை புதியவகை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், பிரேஸில், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் ‘சாா்ஸ் கோவ் 2’ என்ற புதிய வகை கரோனா நோய்த் தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், மேற்கண்ட நாடுகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பு.அருணா கூறியதாவது: கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் காணப்படுகிறது. வெளிநாடுகளில் புதிய வகை கரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால், கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ளவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்கள், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வட்டார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை காலம் என்பதால் கரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எனவே, கரோனா நோய்த் தொற்று அறிகுறி உள்ளவா்கள் தவறாமல் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com