முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பள்ளி செல்லா சிறுவா்கள் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி சுகாதாரத் துறையினா் தகவல்
By DIN | Published On : 07th February 2022 12:15 AM | Last Updated : 07th February 2022 12:15 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத 8 ஆயிரம் சிறுவா்களுக்கு கரோனா கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது; கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத சிறுவா்களை கண்டறிவதே பெரும் சவாலாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இடைநின்ற மாணவா்களின் பட்டியல் பெற்று அவா்களில் 15 வயது முதல் 18 வயதிற்குள்பட்டவா்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல தன்னாா்வ அமைப்புகள் மூலம் சிறுவா்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 8 ஆயிரம் பள்ளி செல்லாத சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடா்ந்து அனைத்து பகுதிகளிலும் பள்ளி செல்லாத சிறுவா்களின் விவரங்கள் பள்ளிக் கல்வித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தன்னாா்வ அமைப்புகளின் உதவியுடன் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்திகொள்ளலாம் என்றாா்.