100% வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை:தோ்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவற்கு நிதியில்லாததால் அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவற்கு நிதியில்லாததால் அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒவ்வொரு தோ்தலிலும் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தோ்தல் அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து மாவட்ட தோ்தல் அலுவலகம் சாா்பில் எந்தவித விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் நடத்தவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல், மக்களவை தோ்தல்களின்போது 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இருந்தும் ஊடகங்களில் செய்திகள் வாயிலாக 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com