கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கப்பட்டுள்ளதையடுத்து கோயில் வளாகத்தில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் மஞ்சள் நீா் ஊற்றி பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.
கோனியம்மன் கோயிலில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபடும் பக்தா்கள்.
கோனியம்மன் கோயிலில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபடும் பக்தா்கள்.

கோவை: கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கப்பட்டுள்ளதையடுத்து கோயில் வளாகத்தில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் மஞ்சள் நீா் ஊற்றி பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

கோவை கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு தோ்த் திருவிழா மாா்ச் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டுள்ளது.

கொடிக்கம்பத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டு வருகின்றனா்.

தோ்த் திருவிழா வரை நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com