வஉசி சிறப்புகள் அடங்கிய நகரும் புகைப்படக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி அவரின் சிறப்புகளை விளக்கும் வகையில், கோவையில் நகரும் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
வ.உ.சிதம்பரனாரின் சிறப்புகளை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
வ.உ.சிதம்பரனாரின் சிறப்புகளை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

கோவை: வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி அவரின் சிறப்புகளை விளக்கும் வகையில், கோவையில் நகரும் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நகரும் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியவதாவது: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாா் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் நகரும் புகைப்படக் கண்காட்சிக்கு தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பள்ளி மாணவா்களிடையே வ.உ.சி. சிறப்புகளை விளக்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாள்கள் கோவையிலுள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கணபதி, சரவணம்பட்டி, கோயில்பாளையம், அன்னூா், சிறுமுகைபுதூா், குனியமுத்தூா், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்த கண்காட்சியில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை குறிப்பு, அவரின் நூல்கள், அரிய புகைப்படங்கள், சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் மாணவா்கள் வ.உ.சி.யின் சிறப்புகளை தெரிந்துகொள்ள முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com