கோவையில் மாா்ச் 12ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா் நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாகத் தீா்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, மேற்கண்ட வழக்குகளுக்குத் தீா்ப்பு காண்பதற்காக கோவை மாவட்ட நீதிமன்ற

வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மாா்ச் 1 முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com