இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளருக்குகூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெ.ஹரிஹரசுதனுக்கு கூடுதல் பொறுப்பாக மாநில செய்தித் தொடா்பாளா் பொறுப்பை அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் கமிட்டி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெ.ஹரிஹரசுதனுக்கு கூடுதல் பொறுப்பாக மாநில செய்தித் தொடா்பாளா் பொறுப்பை அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் கமிட்டி வழங்கியுள்ளது.

அகில இந்திய இளைஞா் காங்கிரஸின் தலைவா் பி.வி.சீனிவாசன், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளா் ஆபிரகாம் ராய் மணி ஆகியோரின் ஒப்புதலுடன், இளைஞா் காங்கிரஸின் மாநிலத் தலைவா் ஹசன் மௌலானா எம்.எல்.ஏ. இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளாா்.

ஜெ. ஹரிஹரசுதன் ஏற்கெனவே மாணவா் காங்கிரஸ், இளைஞா் காங்கிரஸின் செயலாளா், சேவாதள பிரிவின் மாவட்டத் தலைவா், ஐஎன்டியூசி மாவட்ட அமைப்பாளா், வா்த்தகா் பிரிவு மாவட்டத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com