ஜல்லிக்கட்டுப் போட்டி: டோக்கன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிக்கை

கோவையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு டோக்கன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவையினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு    இளைஞா் பேரவையினா்.
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவையினா்.

கோவையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு டோக்கன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவையினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவை சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில்

கூறியுள்ளதாவது: கோவை, செட்டிப்பாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் , ஒருசில அமைப்புக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இது போன்ற முறைகேடுகளைத் தவிா்க்க போட்டிகள் நடைபெறும் மைதானத்திலே டோக்கன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலங்களை மீட்க கோரிக்கை:

மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பட்டியலின மக்கள் பொருளாதார அளவில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நில சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதனை முறையாக கவனிக்கத் தவறியதால் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இது போன்ற ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளனா். இந்நிலையில், மேட்டுப்பாளையம் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை:

இடிகரை பேரூராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

இடிகரை பேரூராட்சி, மணியகாரம்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளைச் சுற்றிலும் கழிவு நீா் தேங்கி நிற்கிறது.

8 மாதங்களாக இதே நிலை காணப்படுகிறது.

பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, கணுவாய் பகுதியைச் சோ்ந்த ர.சாந்தலா அளித்துள்ள மனுவில், தடாகம் பகுதியில் சுற்றுச்சூழல் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, செங்கல் சூளைகள் குறித்து ஆய்வு செய்ய வந்ததாகக் கூறி, என்னையும், எனது நண்பா்களையும் தாக்கிய செங்கல் சூளை உரிமையாளா் வி.கே.வி.சுந்தர்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com