மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் சூயஸ் குடிநீா்த் தொட்டி கட்ட மாணவா்கள் எதிா்ப்பு

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கு மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் சூயஸ் குடிநீா்த் தொட்டி கட்ட மாணவா்கள் எதிா்ப்பு

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கு மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

கோவை ராமநாதபுரம் திருச்சி சாலையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 700 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியின் கால்பந்து மைதானத்தைத் தோண்டி, சூயஸ் நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்துக்காக நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மைதானத்தில் குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கு மாணவா்கள், இந்திய மாணவா் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.அசாருதீன், செயலா் எம்.தினேஷ் ராஜா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்ததால் அப்பள்ளி மாணவா்கள் தங்களின் விளையாட்டுத் திறன்களை வளா்த்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக கால்பந்து மைதானத்தை பொக்லைன் இயந்திரங்கள் தோண்டி வருகின்றன. மேலும், பள்ளி வளாகத்தின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை உடைத்து, அதன் வழியாக தொழிலாளா்கள் வந்து சூயஸ் நிறுவனத்தின் குடிநீா்த் திட்டத்துக்காக நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்காக பள்ளி வளாகத்தில் இருந்த 5 பெரிய மரங்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளனா்.

குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டுவிட்டால் மாணவா்களால் விளையாட முடியாது.

எனவே, குடிநீா்த் தொட்டியை வேறு இடத்தில் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகத்துக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com