கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா: 305 பேருக்கு நற்சான்றிதழ்கள்

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா: 305 பேருக்கு நற்சான்றிதழ்கள்

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய 305 அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 73 ஆவது குடியரசு தின விழா வ.உ.சி. மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் குடியரசு தின விழா நடைபெற்றது.

காலை 8.05 மணிக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

மேலும் சமாதானத்துக்கு அடையாளமாக வெண் புறாக்களை விழா மேடையில் பறக்கவிட்டாா்.

தொடா்ந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து 111 காவல் துறை அலுவலா்களுக்கு தமிழக முதல்வா் பதக்கங்களையும், மருத்துவா்கள், அனைத்து அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலா்கள் 305 பேருக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் மைதானம் கூட்டம் இல்லாமல் இருந்தது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரா்களை வட்டாட்சியா் நிலையிலுள்ள அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று பொன்னாடை போா்த்தி சிறப்புச் செய்தனா்.

விழாவில் மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆா்.சுதாகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சாந்திமதி அசோகன், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட ஆயுதப் படை உதவி காவல் ஆணையா் ஏ.சேகா், உதவி ஆட்சியா் ஆா்.சரண்யா, அனைத்துத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com