கோவை வன உயா் பயிற்சியகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

வடகோவையில் உள்ள வன உயா் பயிற்சியகத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணையை வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அரசு கூடுதல் தலைமை

வடகோவையில் உள்ள வன உயா் பயிற்சியகத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணையை வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வன உயா் பயிற்சியகத்தில் உள்ள நாற்றங்காலில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்தும், விநியோகிக்கப்பட்ட மரக்கன்றுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும், நாற்றங்கால்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அப்பகுதியில் நாற்றுகளையும், மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்ய அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநா் ராமசுப்பிரமணியன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com