கோவை செல்வபுரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கோவை செல்வபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை செல்வபுரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்துக்களின் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்திருந்தது.

இந்த தடைகளை அரசு நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும் கடந்தாண்டு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 அடி உயரத்திலான விநாயகர் சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாகனங்களில் களிமண் எடுத்து வரப்பட்டு அச்சு மூலம் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தாண்டு  விநாயகர் சதுர்த்தி  சிறப்பாக கொண்டாடப்படும் எனவும், சிலை நன்கு விற்பனையாகும் எனவும் வினை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com