கூட்டுறவு வங்கியில் வேலை: இணையத்தில் பொய்யான தகவல்-விழிப்புடன் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

இணையத்தில் வெளியாகும் விளம்பரத்தைப் பாா்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வெளியாகும் விளம்பரத்தைப் பாா்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம், அம்மாபேட்டை, ஓமலூா், மேட்டூா், அந்தியூா், பவானி, கோபிசெட்டிப்பாளையம், பெருந்துறை, திருப்பூா், எட்டிமடை, காரமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இதற்கான நோ்காணல் நடைபெற்று வருவதாகவும் ஓ.எல்.எக்ஸ் (ஞகல) செயலியில் விளம்பரப்படுத்தி பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.

எனவே, ஓ.எல்.எக்ஸ் செயலியில் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com