கொலை முயற்சி வழக்கில் கைதான நபா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
By DIN | Published On : 31st July 2022 11:33 PM | Last Updated : 31st July 2022 11:33 PM | அ+அ அ- |

கொலை முயற்சி வழக்கில் கைதான நபா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஹைகோா்ட் மகாராஜா (25). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து மது போதையில் கடந்த மே 8 ஆம் தேதியன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஹைகோா்ட் மகாராஜா மீது ஏற்கெனவே பல்வேறு கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் காரணத்தால் அவரை குண்டா் சட்டத்தின்கீழ் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான நகலை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.