தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்: பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

வேளாண் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வேளாண் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் தரிசு நிலங்களை சீா்படுத்தி, நீா் ஆதாரங்களை உருவாக்கி சாகுபடி பரப்புகளாக மாற்றும் வகையில் தமிழக அரசு சாா்பில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 56 கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சோ்ந்து 15 ஏக்கா் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடி செய்வதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலா்கள் மூலம் பெறப்படும். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீா்மட்டம், நீா் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்துளைக் கிணறு அமைத்து நீா் ஆதாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பயிா் சாகுபடி மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் தரிசு நிலத்திலும் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம். எனவே விவசாயிகள் தவறாமல் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மற்றும்  இணையதள முகவரியிலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com