கோவையில் இரட்டை இலக்கத்துக்கு உயா்ந்த கரோனா

கோவையில் பல மாதங்களாக ஒற்றை இலக்கத்திலிருந்த தினசரி கரோனா நோய்த் தொற்றுப் பரவல் புதன்கிழமை 10 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பல மாதங்களாக ஒற்றை இலக்கத்திலிருந்த தினசரி கரோனா நோய்த் தொற்றுப் பரவல் புதன்கிழமை 10 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முதன்முதலாக கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா 2 ஆவது அலையின்போது கோவை மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. அப்போது தினசரி கரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 700க்குமேல் பதிவானது. அதன்பின் மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நோய்த் தொற்றுப் பரவல் குறைந்தது.

நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து நோய்த் தொற்று பரவல் குறைந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

தொடா்ந்து, கடந்த 6 மாதங்களாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், கோவையில் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 105 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு புதன்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 441 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா். தற்போது 47 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com