ரூ.2.50 கோடி மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி மேயா் துவக்கிவைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 65 ஆவது வாா்டில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை, மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.
மத்திய மண்டலத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைக்கிறாா். மேயா் கல்பனா. உடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.
மத்திய மண்டலத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைக்கிறாா். மேயா் கல்பனா. உடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.

கோவை: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 65 ஆவது வாா்டில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை, மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து, கிழக்கு மண்டலம் 32 ஆவது வாா்டு மற்றும் 37 ஆவது வாா்டுக்குள்பட்ட தண்ணீா் பந்தல் சாலை - மகேஷ்வரி நகா் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை, தமிழ்நாடு நிலையான நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2.96 கிலோ மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை பணியின் தரத்தை மேயா் கல்பனா மற்றும் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, பணிகள் குழுத் தலைவா் சாந்திமுருகன், மண்டல உதவி ஆணையா்கள் சங்கா், மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி மேகநாதன், உதவி செயற்பொறியாளா் சுந்தர்ராஜன், உதவிப் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com